பணி நிரவல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு!

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று திடீரென புறக்கணிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

 காஞ்சிபுரத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல், பணிநிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை காஞ்சிபுரம் கா.மு. சுப்புராயன் முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. தொடக்கக்கல்வித்துறை உதவி இயக்குநர் உமா, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா ஆகியோர் நடத்தினர்.

 இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது பணிநிரவல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டப்படி உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் தொடக்கக்கல்வித்துறை உதவி இயக்குநர் உமா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து மீண்டும் கலந்தாய்வு நடைபெற்றது.

 இது குறித்து அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் சேகர் கூறியது: அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அந்த விகிதப்படி 61 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 3 ஆசிரியர் பணியிடம் இருக்க வேண்டும். ஆனால் அந்த விதிகளுக்கு புறம்பாக 75 மாணவர்கள் இருந்தால்தான் 3-வது ஆசிரியர் நியமிக்கப்படுவர் என்று கல்வித்துறை திடீரென வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது.

 அப்படி என்றால் ஒரு பள்ளியில் 74 மாணவர்கள் படித்து 3 ஆசிரியர்கள் இருந்தால், அதில் 1 ஆசிரியரை பணிநிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர் என்று உடன்பாடு ஏற்பட்டது. அதே போல் 55 மாணவர்கள் இருக்கும் பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணிபுரிந்தால், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அதிகாரிகள் உடன்பட்டனர். இதைத் தொடர்ந்து நாங்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டார் என்றார்.

 இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்ட போது, எவ்வித பிரச்னையும் இல்லை. உரிய விதிமுறைகளின் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அமைதியாக நடைபெறுகிறது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...