சிடெட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்!!!

தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - டெட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற
மாநில பள்ளிகளில் பணியாற்ற, சிடெட் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.


இந்த ஆண்டுக்கான,சிடெட் தேர்வு, செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்கலாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...