பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுப்பு

'எங்களை பதவி இறக்கம் செய்யுங்க': கெஞ்சும் தலைமை ஆசிரியர்கள்
பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய

வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,600 ம், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4,700 ம் வழங்கப்படுகிறது.

ஊதிய முரண்பாட்டை களைய 2011 ல் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு 2009 மே 31 க்குள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்தியது. இந்த தர ஊதியம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.


இதனால் 2009 மே 31 முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 100க்கும் மேற்பட்டோர், தங்களை தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களை பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...