செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களை பரிசீலனை
செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் கேட்டபோது, “பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...