ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் கோரி ஓய்வுபெற்ற காவலர்கள் 30ல் உண்ணாவிரதம் சென்னையில் நடக்கிறது!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. மாநில அமைப்புச் செயலாளர்  பத்மநாபன் தலைமை வகித்தார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கும் நடப்பு
 நிதியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி 113 சதவீதம் தற்பொழுது வழங்கப்படுவதால் அகவிலை ஊதியமாக 50 சதவீதம்  அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து ஊதியமாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மருத்துவபடியாக ரூ.500 மாதந்தோறும் வழங்குவது போல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கிட வேண்டும்.  டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் ஓஎன்ஜிசி, கெயில் போன்ற நிறுவனங்கள் மீத்தேன்வாயு, பெட்ரோலியம் வாயு, நிலக்கரி  போன்ற இயற்கை வளங்களை எடுப்பதை தடை செய்து விவசாயிகளிள் நலனை காக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை முன்பணம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த தீர்மானம் வைத்து பெற்றுதரப்பட்டது. இதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி  வழங்க வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...