3,000 ஆண்டுகள் பழையான நகரம் மதுரை! இன்று நவீனமயமாக மாணவியர் கருத்து கேட்பு!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விழிப்புணர்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.
மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். கலெக்டர் சுப்பிரமணியன்
முன்னிலை வகித்து பேசியதாவது: 3,000 ஆண்டுகள் பழையான நகரம் மதுரை. பல நாடுகளில் இருந்தும் இங்கு மக்கள் வருகின்றனர். அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ளோம். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புகளால் ஐந்தாண்டுகளில் ரூ.1,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் எந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் இத்திட்டங்களை தேர்வு செய்யலாம், என்றார்.

கமிஷனர் கதிரவன் பேசுகையில், முழுமையான கட்டமைப்புகளுக்கு தேவையான திட்டங்களும், தனித்திட்டங்களும் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படலாம், என்றார். ஆன்லைனின் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏராளமான கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். ஆன்லைன் வாக்களிப்பு குறித்து நகர் பொறியாளர் மதுரம் விளக்கினார். மேடையில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

துணை கமிஷனர் சாந்தி, நகர் நல அலுலவலர் யசோதா மணி, நகரமைப்பு அலுவலர் ரங்கராஜன், உதவி கமிஷனர்கள் பழனிச்சாமி, நாராயணன், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...