7 கோடி ரூபாய் கட்டடத்தை வாங்க, தலா, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, மாணவியரை, தனியார் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம், ராமகிருஷ்ணா சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், எல்.கே.ஜி.,
முதல், பிளஸ்2 வரை, 3,800 மாணவியர் வரை, படிக்கின்றனர். உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளிக்கு அருகிலேயே, 7 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கட்டடத்தை வாங்க, பள்ளி நிர்வாகம் விரும்புகிறது. இதற்காக, அனைத்து மாணவியரின் பெற்றோரையும் வரவழைத்து, பள்ளி முதல்வர் நோரா பேசியுள்ளார்.
இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது:
பள்ளி முதல்வர், எங்களை அழைத்து பேசினார். 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாக வேண்டும்; எதிர்காலத்தில், உங்களுடைய குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். அவ்வளவு பணம் முடியாது; 2,000 ரூபாய் தருகிறோம் என்றால், அதெல்லாம் யூஸ்லெஸ் (பலனில்லாதது) என்கிறார். பணம் கொடுக்காதபட்சத்தில், குழந்தைகளுக்கு தேவையற்ற பிரச்னைகள் வருமோ என்ற அச்சம் உள்ளது. என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறோம்.
பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு புகார் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பள்ளி முதல்வர் நோராவிடம் கேட்ட போது, நான், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோளாக தான் கேட்கிறேன். விருப்பப்பட்டவர்கள் கொடுக்கலாம். இதை பெரிதாக்க வேண்டாம். பெற்றோர் ஏன், இதையெல்லாம் வெளியில் சொல்லி கொண்டிருக்கின்றனர், என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், குளூனி பள்ளி விவகாரம் தொடர்பாக, என்னுடைய கவனத்துக்கும் வந்துள்ளது; உரிய விசாரணை நடத்தி, அது குறித்து தகவல் தெரிவிக்கிறேன், என்றார்.