‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும், வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு
சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மாத சம்பளக்காரர்கள், மூத்தக் குடிமக்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் நேரடியாக வந்து தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீபண்ட் பெறுபவர்கள் ‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛ வருமான வரித்தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியான கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ‛ஆன்-லைன்’ மூலம் வரித் தாக்கல் செய்தவர்கள் கணினி சர்வர் பிரச்சினையால் மிகவும் சிரமப்பட்டதாகவும், இதனால் பலர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...