அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் 8,760 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கிராம நிர்வாக
அலுவலர்களுக்கு முப்பது சதவீத பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு, மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ச.சேகரன் தலைமை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாட்டுப் பேருரையாற்றி பேசியதாவது:
ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். கடந்த 4 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி., கருணை அடிப்படையில் 8,760 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் யாரும் குற்றம்சாட்ட முடியாத வகையில் நேர்மையான முறையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளது என்றார்