சிலிண்டர் வாங்க இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கம்

சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் தொடக்கி வைத்தார்.இதன் மூலம், இணையதளம் மூலம்
வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் கோரி விண்ணபிக்கலாம்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் 48 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகவர் 3 முதல் 4 நாட்களில் சமையல் எரிவாயு உருளையை அளிப்பார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறினார்.​

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...