அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பல்கலை. ஆசிரியர் சங்கம் பங்கேற்பு!

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதன்கிழமை (செப்.2) நடத்தப்பட உள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக தமிழ்நாடு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் என். பசுபதி வெளியிட்ட செய்தி:
 மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு மத்திய வர்த்தக சங்கங்கள், அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.
 இதற்கு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது. சங்கத்தில் அங்கம் வகிக்கும் பேராசிரியர்கள் அனைவரும் அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
 இந்தப் போராட்டத்தின் போது, கல்வி வர்த்தகமாக்கப்படுவதும், தனியார்மயமாக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...