12 வயது பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் சேரலாம்!!!

வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் இணையலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.மேலும், செல்வ மகள்
சேமிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ. 2 ஆயிரத்து 328 கோடி அளவுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்தக் கணக்குகளை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் சேர முடியும். ஆனால், வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை 12 வயதான குழந்தைகளும் இத்திட்டத்தில் இணையலாம். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கான கணக்குகளை தொடங்கலாம்'' என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...