மதுரையில் நவம்பர்1-இல் திருக்குறள் போட்டி; சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கெளரவிப்பு

தமிழக அளவில் மதுரையில் நடைபெறும் திருக்குறள் போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்படுவர் என்று, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

 தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தருண் விஜய், "திருவள்ளுவர் மாணவர், இளைஞர்' எனும் அமைப்பை அண்மையில் தொடங்கினார். இதன் சார்பில் தமிழக அளவிலான திருக்குறள் போட்டி, மதுரை கோபாலகிருஷ்ணன் நகரில் உள்ள மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளியில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி காலை 8 முதல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
 இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: திருக்குறளைப் பிரபலப்படுத்தவும், திருக்குறளைக் கற்று அதில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், திருக்குறளின் மேன்மையை நாடு முழுவதும் பரப்பும் நோக்கிலும் திருக்குறள் ஒப்புவித்தல், திறனறிதல் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பிடம் பெறும் மாணவர்களும், அவர்களது ஆசிரியர்களும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொரின் போது நாடாளுமன்ற வளாகத்தில் அழைக்கப்பட்டு கெüரவிக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்களை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்க உள்ளார். மேலும், அவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் தருண் விஜய்.
 மதுரையில் நடைபெற உள்ள இப்போட்டியில் 12 முதல் 29 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் தங்களின் பள்ளி / கல்லூரியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மாணவர் பெயர், வகுப்பு, வயது, தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களை ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ள்ஹ்ற்ஃஞ்ம்ஹண்ப் ஸ்ரீர்ம், ள்ஹ்ற்ய்ட்வ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் அக்டோபர் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி குறித்த விவரங்களை 8098538635, 9944458123 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...