மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 23-ம் தேதி செயல்படும்!

அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கு வரும் சனிக்கிழமை (24-ம் தேதி) விடுமுறை என அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அலுவலகங்களுக்கும் மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛‛மொஹரம் பண்டிகைக்கான விடுமுறையை அக்.23-ம் தேதியில் இருந்து அக்.24-ம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மொஹரத்துக்கான விடுமுறையை மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு 24-ம் தேதிக்கு மாற்றி அமைத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும்’’ என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வங்கிகளுக்கும் மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக வங்கிகளுக்கு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆயுதபூஜை, மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுப்பு காரணமாக அக்.21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கு 23-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக 24-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. இதை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு அன்றைய தினம் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...