வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க இன்று 2வது கட்ட சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் நேரில் சென்று விண்ணப்பம்அளிக்கலாம்.

2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடம் மாறுதல் செய்து கொள்ள வருகிற 14ம் தேதி வரை அலுவலக நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம். elections.tn.gov.in/eregistration என்ற இணையதளம் மூலமும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்யலாம்.இந்நிலையில் அலுவலகம் செல்பவர்களுக்கு வசதியாக, மிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளில் இன்று 2ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறும்போது, “2வது கட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்யலாம்” என்றார்.


முகவரி சான்று கட்டாயம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கும்போது புகைப்படத்துடன், கூடுதலாக வசிப்பிட முகவரி சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், சமையல் எரிவாயுஇணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது அல்லது ஆதார் அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். 18 வயது முதல் 25 வயதுள்ள மனுதாரர்கள் வசிப்பிட சான்றிதழுடன் வயது சான்றிதழையும் கட்டாயம் அளிக்க வேண்டும். பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்கள், கள ஆய்வுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதைத்தொடர்ந்து புதிய வாக்காளர் பட்டியல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...