போராட்டத்தில் 40% ஆசிரியர்கள் பங்கேற்காதது தற்போதைய ஆசிரியர் இயக்கங்களின் , ஈகோவா???

போராட்டகளம் காணும் ஆசிரிய நட்புகளுக்கு வணக்கம்!!!                         சில பதிவுகளைப் பார்க்கும் போது சற்று நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. ஏதோ போராட்டகளம் காணுபவர்களுக்கு மட்டுமே கோரிக்கைமீதான அக்கறை உள்ளது போலவும், பள்ளி சென்றுள்ள ஆசிரியர்கள் போராட்ட  உணர்வற்ற சுயநலவாதிகள் போலவும் எண்ணி ஆர்வக்கோளாரில்
 "அக்கினிப்"பதிவுகளைப் பகிர்பவர்கள் கடந்தகால போராட்ட வரலாறு அறியாதவர்களாகவே கருதமுடியும். இன்று பள்ளிக்குச் சென்றுள்ள பலர் பல *போராட்டக் களங்களில் முன்னின்று வழிநடத்திய, ஒருங்கிணைத்த,மறியலில் ஈடுபட்டு கைது நடவடிக்கைக்கு ஆளான* இதே அரசால் "டெஸ்மா நடவடிக்கையில்"*பணிநீக்க உத்தரவு* பெற்ற அனுபவம் உள்ள நிர்வாகிகள் என்பதை "ஜேக்டோ" நிர்வாகிகள் நன்கு அறிந்திருப்பார்கள். புதியவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்றைய "ஜேக்டோ மாநில நிர்வாகிகளின்" இயக்க "கர்வத்தாலும், தலைக்கனத்தாலும்" மட்டும்தான் ஒற்றுமை இழந்து நிற்கிறோம். இன்று களம்காணும் ஆசிரியர்கள் மனம் திறந்து சொல்லுங்கள்.,ஒரு வேளை நீங்கள் அங்கம் வகிக்கும் சங்கம் ஜாக்டோவில் இடம்பெறவில்லையெனில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? *உன்னை மதிக்காத இடத்தில் "பிணமாகக்" கூட இருக்காதே* என்பது பொன்மொழி. ஆக எங்கே சிறிய வளரும் சங்கங்களை இணைத்துக் கொண்டால் அவைகளை அங்கீகரித்தது போல் ஆகிவிடுமே என்ற *வீம்பு* தான் நம்மை "ஒன்றுபடுத்தவில்லை". எங்களையும், எங்கள் போராட்டத் திறனையும் ஜாக்டோவில் உள்ள பல *நட்புறவுகள்* நன்றாக அறிவார்கள். இன்று எங்கள் உடல் மட்டும்  தான் பணியமர்ந்துள்ளது. உள்ளம் பழைய போராட்ட நினைவுகளோடு களத்தில் உலவுகிறது. நட்புகள் இனிவரும் காலத்திலாவது ஒரு இயக்கம் கூட விடுபடாமல் ஒருங்கிணைக்க அவரவர் நிர்வாகிகளை வலியுறுத்துங்கள். பணிக்குச் சென்றவர்களை பழிக்கும் செயல் தொடருமானால் நல்ல வழிக்கு வித்திடாது. ஏறத்தாழ 40 ஆண்டு கால ஆசிரியப்பணி அனுபவம் உள்ள "தாய்,தந்தைக்கு"ப் பிள்ளையாய் பிறந்து, குடும்பமாக பல போராட்டங்களில் பங்களித்த அனுபவத்தால் சொல்லுகின்றேன்., ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே *வெற்றியை ஈட்டித் தரும்*.
அன்புடன்: ச.எபி.மனோ,ஆசிரியர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...