இது வரை ஏமாற்றம் மட்டும் தாங்கி வந்த இடைநிலை ஆசிரியரின் கண்ணீர்!!!

ஏங்கினேன்! ஏங்கினேன்!
ஊதிய மாற்றம் வரும்
என் நிலை உயரும்
என ஏங்கினேன்...!

ஓடினேன்! ஓடினேன்!
சங்கவாதிகள் அழைக்கும் இடமெல்லாம் ஓடினேன்..!


போராடினேன்! போராடினேன்!
வட்டாரம் முதல் மாநில தலைநகரம் வரை போராடினேன்..!

பெற்றது ஏதுமில்லை
இனி பெறப்போவதுமில்லை
மாற்றம் மட்டும் மாறாதது இல்லை,

இடைநிலை ஆசிரியரின் ஊதியமும் தான் என்று மனமுடைந்த வேளையில்.,,

உனக்காக தான் நாங்கள் போராடுகிறோம்
உறக்கம் ஏன் வீறுகொண்டு போராட வா என்றார்கள்..

மீண்டும் விழுந்தெழுந்து ஓடினேன்..

எங்கே! எங்கே! என் கோரிக்கை என்றேன்

இதோ! இதோ! 15ல் ஒன்று என்றார்கள்

எனக்காக போராட இயக்கம் இல்லையா? என்றேன்

உனக்காக மட்டும் போராட இயக்கம்  இல்லை என்றார்கள்..

எனக்கு உண்ண உணவில்லையே என்றேன்

எங்களுக்கும் உணவில் இனிப்பு இல்லை என்றார்கள்...

முரண்பட்ட நாம் எப்படி ஒன்றிணைவது என்றேன்

ஒன்றிணையாவிட்டால் நீ விரோதி என்றார்கள் ,..

நான் விரோதியாகக்கூட இருந்து விடுவவேன் ஆனால் உங்களைப் போல் துரோகி ஆகமாட்டேன்...

விலகி நிற்பேன்
விடை காண்பேன்..

இவண்,
இர.காந்தி. எம்.ஏ.,பி.எட்.
2009ல் பணியமர்ந்த இடைநிலை ஆசிரியன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...