அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி!

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், அனைத்து இணைப்பு சங்க தலைவர்கள் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில்
நடந்தது.மாநில தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சண்முகம் வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கே.கணேசன் கூறியதாவது:–


சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலத் திட்டங்களை முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அரசு பணியாளர்களுக்கு இருக்கின்ற காரணத்தால் வருகிற 12–ந்தேதி நடக்க இருந்த சிறை நிரப்பும் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.அதற்கு மாறாக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு எங்களது சங்கத்தை அழைத்து பேசா விட்டால் நவம்பர் மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அடுத்த கட்டமாக டிசம்பர் மாதத்தில் மாநில தழுவிய அளவில் சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி கோட்டை நோக்கி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


12,524 ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர், அடிஷனல் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு கால முறை ஊதியம், ஓய்வூதியம், கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட சுமார் 2400–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து பழைய பென்சன் முறையினை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜி.கோதண்டபாணி, நிர்வாகிகள் ராஜா, சுப்பிரமணியன், சீனிவாசன், எஸ்.மதுரம், தமிழ்மணி, பாலசந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...