அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்குவதற்கு, அறிவிப்பு இல்லாமல் அரசின் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, தொழில்நுட்ப
ரீதியாக வசதிகளை ஏற்படுத்தவும், உயர்கல்விக்கு பயனுள்ள வகையிலும், கடந்த 2011-12ம் ஆண்டில் லேப்டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டின், இறுதியிலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் வழங்கிய பின்னர், குறிப்பிட்ட நாளில் லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தற்போது, ஒவ்வொரு பள்ளியாக வழங்கப்பட்டு வருகிறது. உடுமலையில், 15 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பு படிக்கின்றனர். கடந்தாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப்டாப்கள், ஒரு மாதத்துக்கு முன்னர் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
சில பள்ளிகளில், விழாக்கள் நடத்தி, மாணவர்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், லேப்டாப்கள் எல்காட் நிறுவனத்திலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சியடைந்தாலும், அடையாதிருந்தாலும், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, லேப்டாப்கள் ஆண்டு தோறும் கட்டாயம் வழங்கப்படுகிறது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது அதில், லேப்டாப்கள் வழங்கப்படும் எனவும், அதன் தேதியும் குறிப்பிடப்படுகிறது.
மாணவர்கள் லேப்டாப் பெறுவதற்கு, பொதுத் தேர்வு எழுதுவது ஒரு அடிப்படை தகுதியாக தற்போது வரை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தற்போது எந்தவித அறிவிப்புகளுமின்றி, பள்ளிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டிருப்பதால், அதை எவ்வாறு பாதுகாப்பது, எப்போது மாணவர்களுக்கு வழங்குவது என்ற சிக்கல் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் வருவதை யொட்டி திட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசின் இத்தகைய நடவடிக்கை, பள்ளி நிர்வாகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் லேப்டாப்களை வழங்குவதா? அல்லது, தேர்வு முடிவும் வரை, பள்ளியிலேயே வைத்திருப்பதா என்ற தகவல்கள் எதுவுமே வழங்கப்படவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கினால், மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே பள்ளியிலிருந்து இடைநிற்பதுக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. நடப்பாண்டு தேர்வு முடியும் வரை, பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டு மென்றாலும், அரசுப்பள்ளிகளில் இரவுக்காவலர் இல்லாதது, சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகளின் அவலநிலையால், பாதுகாப்பும் கேள்விக்குறியே. மாணவர்களுக்கு வினியோகிப்பது குறித்து, கல்வித்துறை விரைவில், அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
அரசு அறிவித்தபடி வழங்கப்படுகிறது
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், நடப்பாண்டு பிளஸ் 2 மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பள்ளிகளுக்கு லேப்டாப்களை வினியோகம் செய்வதற்கு அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போது ஒவ்வொரு பள்ளியாக லேப்டாப்கள் வினியோகிக்கப்படுகின்றன. அரசு அறிவித்த பின்னர், மாணவர்களுக்கு வழங்கப்படும், என்றார்