பெண்கள் பாதுகாப்புக்காக செல்லிடப்பேசிகளில் புதிய வசதி?

பெண்கள் பாதுகாப்புக்காக செல்லிடப்பேசிகளில் தனி பொத்தான்களை சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

 ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் தில்லியில் நடைபெற்று வரும் "மாணவர் நாடாளுமன்றங்கள் தொடர்பான கருத்தரங்கு' நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மேனகா காந்தி பேசியதாவது:
 அவசர காலங்களில் ஆபத்து நேரிட்டால் எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து மாணவிகள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் அணிந்திருக்கும் நகைகளில் சில சிறிய கருவிகளை இணைத்து தகவல்கள் அனுப்புமாறு செய்யலாம் என்பது உள்பட பல்வேறு யோசனைகள் வந்துள்ளன.
 இதுபோன்ற கருவிகளுடன் பெண்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்களா என்பதைக் கண்டறிவது சாத்தியமல்ல.
 செல்லிடப்பேசிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பொத்தானைச் சேர்ப்பது தொடர்பாக செல்லிடப்பேசி உற்பத்தியாளர்களிடம் அரசு பேசி வருகிறது. இன்னும் சில மாதங்களில் அந்த வசதி அமலாகும்.
 அதன் பின்னர், பெண்கள் ஏதேனும் ஆபத்து நேரிட்டால், செல்லிடப்பேசியில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட பொத்தானை சேர்த்தால் போதுமானது. அந்த வசதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 10 எண்களுக்கு தானாக தகவல்கள் சென்று விடும்.
 "பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம், அவர்களைப் படிக்க வைப்போம்' திட்டத்திலும், காவல் நிலையப் பணிகளில் பெண்களுக்கான பதலிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் விஷயத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார் மேனகா காந்தி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...