இடைநிற்றல் உதவித்தொகை பெறாதவர்களின் கவனத்திற்கு!

இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேவையான ஆவணங்களை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெற்றுத்தரப்படும் என, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசு பள்ளியில் இடைநிற்றல் தவிர்க்க, ஆண்டுக்கு 10, 11ம் வகுப் பிற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம்
மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. 2014-15ல் பிளஸ்2 முடித்த ஒவ்வொரு மாணவ, மாண விக்கு தலா ரூ.6 ஆயிரத்திற்கும் மேல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சில மாணவர்கள், இந்த உதவித்தொகை வாங்க முடியாமல் இருப்பதாக புகார் உள்ளது. வங்கிகளுக்கு சரியான ஆவணம், புள்ளி விவரம் அளிக்காததால் பணம் பெற முடியவில்லை என, வங்கியில் ஆய்வு செய்தபோது தெரிகிறது.

எனவே, இந்த உதவித்தொகையை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 முடித்த பள்ளி தலைமை ஆசிரியர்களைநேரில் அணுகி தேவையான ஆவணங்களை அளித்தால், இடைநிற்றல் தவிர்த்தலுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகையை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...