புளூட்டோவுக்கு அனுப்பப்பட்ட நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படங்களை நேற்று "நாசா' வெளியிட்டது. அதில் பூமியைப் போல நீல வானம் காணப்படுகிறது. சிவப்பு நிறத்தில் ஐஸ் கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புளூட்டோ பனியால் ஆன ஒரு கோள்
. இது 1930ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் சூரியனின் 9வது கோளாக கருதப்பட்டது. பின் கோள் என்பதற்கான சர்வதேச வானியல் கழகத்தின் வரையறை இல்லாததால் இது, இது "சிறிய கோள்' என பெயரிடப்பட்டது. இதற்கு "சாரோன்' உள்ளிட்ட ஐந்து நிலாக்கள் உள்ளன.
இங்கு இதுவரை எந்தவொரு விண்கலமும் செல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இதனையும் விட்டு வைக்கவில்லை. நியூ ஹாரிசன் என்ற விண்கலத்தை 2006 ஜன., 20ல் அனுப்பியது. அது 9 ஆண்டுகளுக்குப்பின் 2015 ஜூலை 14ல் புளூட்டோவை நெருங்கியது. புளூட்டோவின் பரப்பில் இருந்து 12,500 தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து அதில் உள்ள அதி நவீன டெலஸ்கோப், புளூட்டோவை போட்டோ எடுத்தும் அனுப்பியது. அதில், நீல நிற வானம், சிவப்பு நிற ஐஸ் போன்றவைபுதிதாக கண்டறியப்பட்டுள்ளன.
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் சிதறல், வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மீது மோதும்போது வானம் நீலமாக தோன்றும். இதனால், புளூட்டோவின் வானம்நீலமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. தவிர புளூட்டோவில் ஆங்காங்கே உறைந்த நிலையில் நீர் காணப்படுவதாகவும், அவை சிவப்பு நிற ஐஸ் போன்று இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவை சிறப்பு நிறத்தில் தோன்றுவதற்கான காரணம் காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வை துவங்கியுள்ளனர்.
வாயுக்கள்:
பூமியைப்போல அதில் நைட்ரஜன் மிகுந்து இருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் இல்லை. மீத்தேன் கார்பன்டை ஆக்ஸ்சைடு முதலியவை உள்ளன.
வெப்பநிலை:
மைனஸ் 225 டிகிரி செல்சியஸ்.
உள் அமைப்பு :
முற்றிலும் பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
புவி ஈர்ப்பு விசை :
பூமியின் ஈர்ப்பு விசையில் 15ல் ஒரு பங்கு தான் புளூட்டோவில் உள்ளது.
வெளிச்சம் :
சூரியனை புளூட்டோவிலிருந்து பார்த்தால் பூமியிலிருந்து நாம் பார்க்கிற சூரிய வெளிச்சத்தை 900 ஆகப் பிரித்து அதில் ஒரு பங்கு அளவுதான் பிரகாசிக்கும்.
நேரம்:
சூரியக் குடும்பத்தின் விளிம்பில் இருப்பதால், சூரிய ஒளி புளூட்டோவுக்குப் போய்ச் சேர சுமார் ஐந்தரை மணி நேரம் எடுக்கும். ஆனால் பூமிக்கு எட்டு நிமிடத்தில் வந்து சேரும்.