தென் தமிழகத்தில் ஆங்காங்கே திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த சில நாள்களாக வெப்பச்சலனத்தால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு
நாள்களாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவிலும் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், தென் தமிழகத்தில் திங்கள்கிழமை ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். அடுத்து வரும் நாள்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.