நீதிமன்றம்ங்களில் நீதிபதிகள் பதவி விரைவில் நிரப்பி தேங்கிய வழக்குகள் முடிக்கப்படுமா???

ஆறு மாத இடைவெளிக்குப் பின், மீண்டும், 'கொலீஜியம்' முறை அமலுக்கு வந்துள்ளதால், பல மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களில், 406 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டிய பொறுப்பு, கொலீஜியத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், மத்திய அரசு நிறைவேற்றிய, தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் சட்டத்தை, மூன்று நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்றம் செல்லாததாக ஆக்கிவிட்டது. 2014, ஆகஸ்டில், நீதித்துறை நியமனங்கள் கமிஷன் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தான், அது அமலுக்கு வந்தது. எனினும், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதால், நீதிபதிகள் நியமன கமிஷனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. அதுபோல, கொலீஜியம் முறையும் முடக்கப்பட்டிருந்தது. இதனால், மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பு, ஆறு மாதங்களுக்குப் பின் கொலீஜியத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.



இம்மாதம், 1ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும், 406 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; எட்டு மாநிலங்களில், தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.மும்பை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, கர்நாடகா, பாட்னா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கவுஹாத்தி உயர் நீதிமன்றங்களில், தலைமை நீதிபதிகள் பணியிடம் நிரப்பப்படாமல், அந்த இடங்களில் தற்காலிக தலைமை நீதிபதிகள் பொறுப்பு வகிக்கின்றனர். 21 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது.



இந்த இடங்களை நிரப்புவதற்கான பணிகளை, நீதிபதிகளை கொண்ட குழுவான, கொலீஜியம் மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும், மாநில உயர் நீதிமன்றங்களிலும் கொலீஜியம் செயல்படுகிறது. இந்த நீதிபதிகள் குழு பரிந்துரையை, மாநில அரசுகளும், மத்திய அரசும் ஏற்று, நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...