மதுவிலக்கை வலியுறுத்தியர் தேச துரோக வழக்கில் கைது!!! ( என்ன கொடுமை )

மதுவிலக்கை வலியுறுத்தி அரசுக்கு எதிராக அவதூறு பாடலை பாடியதாக தெருக்கூத்து பாடகர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அவதூறு பாடல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி அரசுக்கு எதிராக அவதூறு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் வெளியாகியுள்ளது. யூ டியூப் மற்றும் டுவிட்டர் இணையதளங்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலை பிரபல தெருக்கூத்து பாடகர் சிவதாஸ் (எ) கோவன் (வயது 54) என்பவர் பாடியுள்ளார். இவர் மக்கள் கலை இலக்கியக்கழகம் என்ற அமைப்பில் மைய கலைக்குழு பொறுப்பாளராக உள்ளார். திருச்சியை அடுத்த உறையூர் அருகே உள்ள அரவனூர் மருதாண்டகுறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர்.

இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தலைவர் கண்ணையன் ராமதாஸ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேசத்துரோக வழக்கு

‘‘மூடு, மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் கோவன் பாடிய பாடல் வெளிவந்துள்ளது. ‘‘ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்’’ என்ற வரியுடன் இந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடல் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு பொது அமைதியை குலைக்கும் வகையிலும் தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கையை கொச்சைப்படுத்தும் வகையிலும் இருப்பதாக போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.

இ.பி.கோ.124 (எ) (தேசத்துரோகம்), 153 (இருபிரிவினரிடையே சண்டையை மூட்டுதல்), 505 (1) (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

கைது

நேற்று அதிகாலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின், கோவனை அவரது சொந்த ஊரில் கைது செய்தார். அவர் உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.

விசாரணை முடிவடைந்த பின்பு அவர் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்படுவார் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.

உஷார் நடவடிக்கை

அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் போராட்டங்களில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்போடு சென்னையில் நேற்று போலீசார் உஷார் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னை முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைவர் கண்ணையன் ராமதாசும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...