தமிழகத்தில் ஆசிரியர் இயக்கங்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினால் வெற்றி சாத்தியமா??? ஓர் அலசல் !

அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளே (டிட்டோஜாக்) கவனத்திற்கு!!!

ஜாக்டோ என்றால் அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு என்று சொல்கிறீர்கள் ஆனால்  அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைக்காமல்
நாங்கள் ஏழு சங்கங்கள் மட்டும் தான் இருப்போம் மற்ற சங்கங்களை சேர்க்க மாட்டோம் என்று சொல்வதன் பெயர் தான் ஒற்றுமையா? இல்லை கூட்டு நடவடிக்கையா?


உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள சிறு சிறு இயக்கங்களையும் ஜாக்டோ-வில் இணைத்துக் கொள்ளும் போது நீங்கள்  மட்டும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள மற்ற இயக்கங்களை இணைத்துக் கொள்ள மறுப்பதன் காரணம் என்னவோ?

2009-க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் சுமார் 20000 ஆசிரியர்கள் உங்கள் சங்கங்களில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?
2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களின் பிரச்சனைகளை இதுவரை கேட்டதுண்டா??? அல்லது அவர்களுக்காக அரசிடம் பேசியது தான் உண்டா?? சந்தாவிற்கு சந்திப்பதோடு சரி!!!                                                     அக்டோபர் 8-ல் ஏன் 70% ஆசிரியர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள் மற்றவர்கள் 30% கலந்து கொள்ளாததின் காரணம் அறிவீரோ?                                      
அவர்கள் அரசின் மீதுள்ள பயத்தினாலோ அல்லது அரசியல் காரணங்களாலோ,போராட்டத்திற்கு பயந்தோ  கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவில்லை. உங்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையே மூலகாரணம் என்பதை அறிவீரோ?

மற்றவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சமுதாயமே மற்ற ஆசிரியர்கள் இயக்கத்தை மதிக்காமல் மிதிப்பது சரியோ?

உங்கள் சங்கங்கள் சரியாக செயல்பட்டிருந்தால் ஏன் இளைஞர்கள் புதிய சங்கத்தை உருவாக்குகிறார்கள் என்று எப்போவதாவது சிந்தித்தது உண்டா?

சிந்திப்பீர் அனைவரையும் ஒன்றிணைப்பீர் என்ற நம்பிக்கையில்.......

இவண்
2009-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...