சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட, இந்தியா - பாக்., எல்லைக் கோட்டின் புகைப்படத்தை, நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டது.
செப். 23ல், விண்வெளியில் உள்ள, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நிகான் டி 4 டிஜிட்டல் கேமராவில், 28 மி.மீ., லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், பாக்., பக்கத்தில், சிந்து நதி பள்ளத்தாக்கு தெரிகிறது.இரவு நேரத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைக் கோட்டில், பாதுகாப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதால், அப்பகுதி தெளிவாக தெரிகிறது. இரவிலும், நன்கு தெரியக்கூடிய சில எல்லைகளில், இந்தியா - பாக்., எல்லைக்கோடும் ஒன்று. இமயமலையின் தென்கிழக்கு பகுதியில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதி தெரிகிறது.'பேஸ்புக்கில்' வெளியான இந்த புகைப்படத்திற்கு, இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.