சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்துஇணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லதுவங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...