நிதி பற்றாக்குறையினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், லெதர் ஷூக்களுக்கு பதிலாக, செமி கேன்வாஸ் ஷூக்கள் வழங்க, அரசு தீர்மானித்துள்ளது.
இந்தாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, முதல்வர் சித்தராமையா, 54.54 லட்சம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஷூ மற்றும் காலுறை வழங்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த, லெதர் ஷூக்களுக்கு பதிலாக, செமி கேன்வாஸ் ஷூக்கள் வழங்க அரசு ஆலோசித்துள்ளது. இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம்.
செமி கேன்வாஸ் ஷூ&'க்கள் மாணவர்கள் அணிவதற்கு வசதியாகவும் இருக்கும். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மாணவர்களின் கால் அளவு எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரரிடம் அளவுகள் கொடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டிற்குள் இந்த ஷூக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.