செவிலியப் படிப்புகளுக்கு இன்று இறுதி கட்டக் கலந்தாய்வு!

பி.எஸ்.சி. (செவிலியர்), செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான இறுதிக் கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக். 13) நடைபெறவுள்ளது.

 பி.எஸ்.சி. செவிலியர்: சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 1,364 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அக். 13, 14, 15 ஆகிய 3 நாள்கள் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 3,119 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
 பட்டயப் படிப்பு: அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக 298 இடங்களுக்கு 13-இல் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 651 மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
 இது குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுத் தலைவர் உஷா சதாசிவம் கூறியது:
 காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் கலந்தாய்வு அட்டவணையின்படி, பங்கேற்கலாம். அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...