அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ; டில்லியில் கலாம் வெண்கல சிலை திறப்பு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லியில் கலாமின் வெண்கல உருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 84 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . தமிழகத்தில் கலாம் பிறந்த நாள் , இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது .


அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பள்ளிமாணவர்கள் பலரும் கலாமின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கலாம் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலத்தை கலெக்டர் நந்தகுமார் துவக்கி வைத்தார் .


விஜயகாந்த் அஞ்சலி : கலாமின் சமாதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, ராஜா , அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், டுவன்டி 20 விஷன் நிர்வாகி திருச்செந்தூரான், உள்ளிட்டோர் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர் .


எல்லோருக்கும் முன்மாதிரி ;பிரதமர் புகழாரம்: டில்லில் அப்துல் கலாமின் வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .தொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்; அப்துல் கலாம் எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார் .அவர் ஜனாதிபதியாகும் முன்னரே பாரத ரத்னா விருது பெற்றார். நாட்டை வலுவாக்க வேண்டும் என கலாம் கனவு கண்டார், அவரது கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் கலந்து உரையாடி வந்தார் . அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் . அவரது வாழக்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக திகழும். இளையசமுதாயத்தினர், இளம் விஞ்ஞானிகள் கலாம் கொள்கையை பின்பற்றி வாழ வேண்டும் . அவரது கொள்கை பெரும் சவாலானது இதனை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி காட்டினார் . கலாம் போல் உறுதி ஏற்று நாம் எல்லோரும் வாழ வேண்டும் . கலாமின் சொந்த ஊரில் நினைவு இல்லம் கட்டப்படும் இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் தரும் இடமாக அமையும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...