ஆதார் அட்டை வழக்கு சூப்ரீம் கோர்டு சரமாரி கேள்வி!

ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் சுப்ரீம் அரசுக்கு சரமாரி கேள்வி கேட்டுள்ளது .
நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் காங்கிரஸ் அரசு கொண்டு வரப்பட்டு,
இன்னமும் செயல்படுத்தப்படுகிறது இந்த. திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை .

இதனால் ஆதார் அடையாள அட்டையை அரசு தரப்பில் கட்டாயம் என்று வற்புறுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு சென்றது. இந்த வழக்கில் இன்னும் கோர்ட் இறுதி தீர்ப்பை வழங்கவில்லை. குறிப்பாக அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொருடகள் விநியோகம் ஆகியனவற்றில் ஆதார் அட்டை எந்த அளவுக்கு முக்கியத்துவம் என இன்னும் சில நிறுவனங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை .


இதற்கிடையில் ஆதார் அட்டை கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதார் அட்டை தொடர்பாக சேகரிக்கப்படும் விவரம் எந்த அளவுக்கு பாதுகாப்பானது; விவரத்தை யாரிடமும் பகிரக் கூடாது; சாதாரண ஏழைகளின் விவரம் மதிப்பு குறைந்ததா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று கூறியதால் ஏழைகளுக்கான உணவு தடுக்கப்படுகிறது என மத்திய அரசு வக்கீல் தனது வாதத்தை எடுத்துரைத்தார் .இதற்கு ஒருவர் ஏழை என்பதால், தனிநபர் சுதந்திரம் என்பது அவருக்குக் கிடையாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மேலும் இது தொடர்பாக நாளை மாலை இறுதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...