தமிழகத்தில் கடந்த 18 நாள்களில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-இல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், பலத்த மழை பெய்து வருகிறது.
நெய்வேலியில் அதிக மழை: குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் 480 மி.மீ., மழையும், காஞ்சிபுரத்தில் 340 மி.மீ. மழையும் பதிவானது.
அண்மையில் தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, சனிக்கிழமை தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. அதே இடத்தில் நீடிப்பதால், வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சராசரியைவிட 100 மி.மீ. குறைவுதான்: பருவ மழை தொடங்கிய 18 நாள்களில், தமிழகத்தில் இதுவரை சராசரியாக 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இது, வழக்கமான சராசரியைவிட 100 மி.மீ. குறைவாகும்.
வட கிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகம் பொதுவாக பெறும் சராசரி மழையளவு 450 மி.மீ. ஆகும். 2004 முதல் 2011 வரை இயல்பாகவும், அதற்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது.
2012-இல் 16 சதவீதமும், 2013-இல் 33 சதவீதமும், 2014-இல் 2 சதவீதமும் குறைவாகவும் மழை பெய்துள்ளது. முந்தைய ஆண்டுகளில், தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்தாலும், சென்னை உள்பட வட மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்ட நிலை இருந்தன. வட கிழக்குப் பருவ மழை தொடங்கியப் பின்னர் தான், இந்த ஏரிகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.