3 முதல், 16 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க வேண்டும்!!!

மூன்று வயது முதல், 16 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, என்று துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.



பெங்களூரில், துவக்க கல்வி துறை சார்பில், கன்னட ராஜ்யோத்ஸவா தினத்தை ஒட்டி, குழந்தைகள் மேளாவை, அமைச்சர் கிம்மனே ரத்னாகர் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:தற்போது, 6 முதல், 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதை, 3 முதல், 16 வயதிலான பிள்ளைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கும்படி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கன்னட மொழியில் கல்வி கற்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாநிலத்தில் கன்னட கல்வியை கட்டாயமாக்குவதற்கு அனுகூலமான சட்டம் கொண்டு வரப்படும்.இது தொடர்பான மசோதா, ஜனாதிபதி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் சாதகமாக முடிவெடுக்கும்படி, மத்திய மனிதவளத் துறைக்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கல்வி துறையில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிக்கப்படும்.

குழந்தைகள், கடவுளுக்கு சமம். ஜாதி, தர்மத்தை சமமாக பார்ப்பதன் மூலம், அனைவரும் ஒன்று என்ற சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...