மழை தொடர்வதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வரும் பருவத் தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுபோல, சென்னைப் பல்கலைக்கழகமும் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற இருந்த தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. தொடர் மழை காரணமாக,
சென்னையில் உள்ள பல சாலைகள் சேதமடைந்துள்ளது. இதோடு, பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மழை தொடர வாய்ப்புள்ளதால் பல்கலைக்கழகத் துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடக்க இருந்த பருவத் தேர்வுகளையும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்: இதுபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த இருந்த பருவத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.