தமிழகத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 62 பேர் பலி!!!

தமிழகத்தில் பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சாலையில் நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கள் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன. வீடுகளுக்குள் சென்ற நீர் வடியாததால் தோற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழைக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நிவாரணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...