அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்தல் கூடாது !

வடகிழக்கு பருவமழை உக்கிரம் காட்டி வரும் நிலையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகளை சந்திக்க வேண்டி வரும்என்று பெற்றோர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 11-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாதாந்திர தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன.


மீண்டும் வகுப்புகள் தொடங்கும் போது பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கும், தொடர் பரிட்சையால் மாணவர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து கல்விசார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “இது உண்மையானால் பள்ளிக் கல்வித் துறை தலையிடுவது அவசியம்.


பள்ளிகள் திறந்த பிறகு நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தலாம்என்று கேள்விப்படுகிறோம். இப்படி நடந்தால், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும். தேர்வுகளுக்கு தங்கள் பிள்ளைகளைத் தயார் செய்ய பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் நீண்ட விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” என்றார்.சீயோன் பள்ளிகள் குழுமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவர் கூறும்போது, “மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் முக்கியமானது. பெரும்பாலான மாணவர்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இயல்பு நிலை திரும்பும் வரையில் மாதாந்திர தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும்” என்றார்.


மாணவர்கள் பலர் இந்த விடுப்பு நாட்களில் தேர்வுக்காக தயாரித்துக் கொள்வதில் ஈடுபட்டு வருகிறார்கள், எனவே இந்த விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமை மட்டும் வகுப்புகள் வைத்தால் போதுமானது, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்தல் கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...