சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு நடப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கப்படுகிறது. குழந்தை மையங்களில், 13.88 லட்சம்; பள்ளி சத்துணவு மையங்களில், 54.62 லட்சம் பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு சத்துணவுடன், வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக தினமும், மாநிலம் முழுவதும், 60 லட்சம் முட்டைகள் வாங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், மாவட்ட வாரியாக, முட்டை கொள்முதல் நடந்தது.கலெக்டர் தலைமையிலான குழுவினர், மாதம்தோறும் கூடி, அப்போதைய மார்க்கெட் நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தனர். 2013ல் இருந்து, கொள்முதல் முறை மாறியது. மாநில அளவில், 'டெண்டர்' கோரப்படும் முறை கொண்டு வரப்பட்டது.இதன் மூலம், பெருமளவில் முறைகேடு நடப்பதாக, முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: மாவட்ட அளவில் கொள்முதல் செய்தபோது, 100க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களால், முட்டை சப்ளை செய்ய முடிந்தது. மேலும், மாதம்தோறும் நிலவரப்படி, விலை நிர்ணயிக்கவும் முடிந்தது. இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், சிலர் ஆதாயம் பெற, மாநில டெண்டர் முறையை அறிமுகப்படுத்தினர். இதில், சிறிய
நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு, நிபந்தனைகள் விதித்தனர். குறிப்பிட்ட நிறுவனங்கள்மட்டும் பங்கேற்றன; ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த, 2014ல், வெளி மார்க்கெட்டில், ஒரு முட்டை விலை, 2 ரூபாய் 40 காசு. ஆனால், 4 ரூபாய் 50 காசுக்கு, அந்த நிறுவனம் வழங்கியது. இதனால், தலா ஒரு நாளுக்கு, 1.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மாநில டெண்டர் முறையை எதிர்த்து, சிலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். ஆனால், 'எவ்வித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை; மாநில டெண்டரே தொடரலாம்' என, தீர்ப்பு வந்தது. நடப்பாண்டு, ஒரு முட்டை, 4.35 ரூபாய் என்ற விலையில், அரசு கொள்முதல் செய்கிறது. ஒரே விலையாக நிர்ணயிப்பதால், வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கும்போது, அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பழைய முறைப்படி, மாவட்ட அளவில் மாதம்தோறும் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முட்டை கொள்முதலில் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக, மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில் கூறியுள்ளதாவது: ஒரு முட்டை, 4.35 ரூபாய் என்ற விலையில் அரசு வாங்குகிறது. ஆனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி, ஒரு முட்டை விலை, செப்டம்பரில், 2.97 ரூபாய்; அக்டோபரில், 3.10 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும், அரசுக்கு, 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலையில் கொள்முதல் செய்தால், ஆண்டுக்கு, 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். 2014ல் மட்டும், 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதற்கு, 2 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சிரமங்கள் அதிகம்!
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, 2014 டிசம்பரில், சட்டசபையில், இத்துறை அமைச்சர் வளர்மதி கூறியதாவது:மாவட்ட கொள்முதல் முறையில், பல சிரமங்கள் இருந்தன; விலை வித்தியாசம் இருந்தது. குறிப்பிட்ட காலத்தில், முட்டை சப்ளை செய்யவில்லை. மாவட்டத்திற்கு மாவட்டம், விலை வேறுபட்டது. இதனால், விலை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.சில குறிப்பிட்ட நிறுவனங்கள், கூட்டணி சேர்ந்து, அதிக விலை நிர்ணயித்தன. எனவே, ஒரே மாதிரியான முட்டைகளை, ஒரே விலையில் கொள்முதல் செய்ய, இந்த டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், தரம் மிகுந்த, 'அக்மார்க்' சான்று பெற்ற முட்டை கொள்முதல் உறுதி செய்யப்பட்டது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.