நிபந்தனையை தளர்த்த பள்ளி மாணவிகள் எதிர்பார்ப்பு!

மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை பெற ஆண்டுவருவாய் ரூ.25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த பள்ளி மாணவிகள்
எதிர்பார்க்கின்றனர்.பிற்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டடோர் துறை சார்பில் இந்த ஊக்கத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500ம், ஆறு முதல் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்படும். இத்தொகை பெற சம்மந்தப்பட்ட மாணவிகள், பெற்றோர் ஆண்டு வருமான சான்றிதழ் பெற்று,தலைமையாசிரியர்கள் மூலம் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலரிடம்சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, துறைக்கு அனுப்பப்படும்.இத்தொகை பெற இந்தாண்டு மாணவிகள் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


இது மாணவிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், 'நுாறு நாள் வேலைக்கு சென்றாலே தினமும் ரூ.150க்கு மேல் சம்பளம் பெறும் நிலையில், அரசு அறிவுறுத்தலின்படி ஆண்டிற்கு ரூ.36 ஆயிரத்திற்கு குறைந்து வருவாய் சான்று அளிக்க வி.ஏ.ஓ.,க்களே மறுக்கின்றனர். ரூ.25 ஆயிரத்திற்கு எப்படி வருவாய் சான்று பெற முடியும். சான்று இல்லாததால் மாணவிகளின் விண்ணப்பங்களை பெற அதிகாரிகள் மறுக்கின்றனர்,' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...