நடப்பு கல்வியாண்டில், முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும், அதிகாரி அந்தஸ்துக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 60 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்று, தொழிற்கல்வி பயிலும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர் குடும்பத்தார் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ, விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம், 25க்குள், திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்