மழை: சென்னை பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைப்பு!

தொடர் மழை காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகமும் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
 தொடர் மழை காரணமாக, நவம்பர் 12, 13, 14-ஆம் தேதிகளில் நடக்க இருந்த பருவத் தேர்வுகளை, டிசம்பர் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

 இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளுக்கு நவம்பர் 13, 14-ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 தேர்வுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...