மாதம் ஒரு செயற்கைகோளை அனுப்ப இந்திய விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது,” என மதுரை யாதவர் கல்லுாரியில் நடந்த அறிவியல் ஆய்வு முகாமில் விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.
இக்கல்லுாரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் 'இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு' குறித்த ஐந்துநாள் அறிவியல் முகாம் நடந்தது. முதல்வர் தனசேகரன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை பேராசிரியர் அழகேசன் வரவேற்றார்.
விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் மனித முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதில் விண்வெளி ஆய்வு மிகவும் அத்தியாவசியமானது. இந்தியா 1963ல் முதன்முதலில் செலுத்திய செயற்கைக்கோள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.
60 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் தயாரான செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தினோம். தற்போது பல செயற்கைகோள்களை செலுத்தி வந்தாலும், மாதம் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது.
தற்போது ராக்கெட்களில் பயன்படுத்தும் கிரையோஜெனிக் இன்ஜினில் திரவ எரிவாயு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது. அதற்கு மாறாக ஆக்சிஜன், ஹைட்ரஜனை திரவ வடிவில் மாற்றி அதன் மூலம் கிடைக்கும் உந்து சக்தியால் ராக்கெட்களை செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
36 ஆயிரம் கி.மீ., தொலைவில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும்போது பூமியில் மூன்றில் ஒரு பகுதியை கண்காணிக்க முடிகிறது. ஐ.என்.ஆர்.எஸ்.எஸ்., மூலம் (இண்டியன் ரீஜினெல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்) வடதுருவம், தென்துருவத்தை ஒரு நிமிடத்தில் இணைக்கும் வகையில் 600 முதல் 900 கி.மீ., தொலைவில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துவற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது வெற்றி பெற்றால், தகவல் தொழில்நுட்பத்தில் தடையில்லா சேவை கிடைக்கும்.
ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்திற்கு பயனுள்ள வகையில் 7 செயற்கைக்கோள்களை அனுப்ப 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இதில் 4 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், 3 செயற்கைக்கோள்கள் மார்ச்சில் செலுத்தப்பட உள்ளன. அதன்பின் நாட்டின் 'நேவிகேஷன் சிஸ்டம்' (திசை வழிகாட்டி) நுாறு சதவீதம் பூர்த்தி செய்யப்படும்.
அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் சமமாக இருக்க வேண்டும்.
இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றாலும், அறிவியல் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் 'நாம் எல்லாம் ஸ்குரூடிரைவர், ஸ்பானராகத்தான்' உள்ளோம். இந்நிலை மாறி நாமே தொழிற்சாலைகளை வடிவமைத்து வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும், என்றார். ஒருங்கிணைப்பாளர் யசோத்குமார் நன்றி கூறினார்.