பள்ளிக் கல்வித் துறைக்கான கட்டடங்கள் திறப்பு!

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.210 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.28) திறந்துவைத்தார்.
 மேலும், ரூ.401 கோடி மதிப்பிலான கட்டடங்களுக்கு அவர் அடிக்கல்லையும் நாட்டினார்.

 இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12,251 சதுர அடி பரப்பளவில் 100 மாணவியர் தங்குவதற்கு ஏதுவாக ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அரியலூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, நாமக்கல், திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி வளாகங்களில் கட்டப்பட்டுள்ள 20 மாணவியர் விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 13 பள்ளிக் கட்டடங்கள், 8 மாதிரி பள்ளிக் கட்டடங்கள், 233 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 454 கூடுதல் வகுப்பறைகளையும் அவர் திறந்துவைத்தார்.
 9 மாவட்டங்களில்... நபார்டு திட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களில் 31 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.26 கோடியே 14 லட்சத்து மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 221 கூடுதல் வகுப்பறைகள், 23 ஆய்வுக் கூடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
 அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.32 கோடி மதிப்பீட்டில் 215 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 240 கூடுதல் வகுப்பறைகள், 140 தொடக்கப் பள்ளி கட்டடங்கள், 72 நடுநிலைப் பள்ளி கட்டடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 உறைவிடப் பள்ளிகள், விழுப்புரம் கூத்தனூரில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக் கட்டடத்தையும் அவர் திறந்துவைத்தார்.
 கிளை நூலகக் கட்டடங்கள்: திருச்செங்கோடு, வாலாஜா ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கிளை நூலக கட்டடங்கள், கடலூரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகக் கட்டடம், ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சிகளை அளிக்கும் பொருட்டு பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் ரூ.1 கோடியே 94 லட்சம் செலவில் ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் என ரூ.210 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
 ரூ.401 கோடி மதிப்பிலான கட்டடங்களுக்கு அடிக்கல்: காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், நீலகிரி, விழுப்புரம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.13 கோடியே 65 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனக் கட்டடங்களுக்கு முதல்வர்
 ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
 அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.387 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 231 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.401 கோடியே 14 லட்சம் மதிப்பிலான கட்டடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...