பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு !

பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டை வழியே எதிர்பாராத விதமாக சிறுமி கீழே விழுந்து பலியான சம்பவத்தில், குழந்தையின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.



கடந்த 2012ம் ஆண்டு தாம்பரம் அடுத்த சேலையூரில் தனியார் பள்ளியின் வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக,
சிறுமி சுருதி தவறி விழுந்து பலியானார்.

இது குறித்த வழக்கை விசாரித்து வந்த மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சீயோன் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பள்ளிச் சிறுமி சுருதி உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையை இழந்த பெற்றோருக்கு பள்ளி தாளாளர் விஜயன் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...