தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர்-நேர்முக எழுத்தர்
பதவிகளில் காலியாகவுள்ள குரூப் 2ஏ தொகுதியில் வரக்கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 116 இடங்களில் ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகள் எழுத உள்ளனர். தேர்வு மையங்களைக் கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு: தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.