உதவி பொறியாளர் தேர்வு ரூ.5 கோடி வருவாய்!

உதவி பொறியாளர் தேர்வு மூலம், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஐந்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், எெலக்ட்ரிகல் பிரிவில், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜன., 31ல், அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது.

தேர்விற்கு, எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு, 250 ரூபாய்; இதர பிரிவினருக்கு, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மொத்தம், 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தலா, ஒருவரிடம் சராசரியாக, 500 ரூபாய் என, வைத்து கொண்டால், தேர்வு கட்டணம் மூலம், மின் வாரியத்திற்கு, ஐந்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்விற்கு, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 9,000 பேர் பணம் செலுத்தவில்லை. அவர்கள் வசதிக்காக, ஜன., 18 வரை, கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
கட்டணம் மூலம் கிடைத்த வருவாயில், மின் வாரிய இணைய தளத்தை மேம்படுத்தும் வகையில், நவீன கம்ப்யூட்டர் சாதனங்கள் வாங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கு தேர்வு நடத்துவதற்கான வாடகை செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...