சர்வதேச கணித போட்டியில், எட்டு வயது அரசுப் பள்ளி மாணவி சாதனை!

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், எட்டு வயது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகா, ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
உலகம் முழுக்க இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் கார்த்திகாவும் ஒருவர். தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப்
பள்ளியில் மூன்றாவது படிக்கிறார் கார்த்திகா. அவரிடம் பிடித்த பாடம் எது என்று கேட்டால், 'கணக்குப்பாடம்!' என்ற பதில் அடுத்த நொடியில் வந்து விழுகிறது.


கார்த்திகாவின் கணிதத் திறனை அறிந்த ஆசிரியர்கள், இந்திய கூட்டுறவு கற்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு சிறப்புப் பயிற்சி அளித்திருக்கின்றனர்.


இந்தப் பயிற்சி குறித்து ஆசிரியர் ஸ்வாதி நந்தி கூறும்போது, "கார்த்திகா, கணிதத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்ததை நாங்கள் புரிந்துகொண்டு பயிற்சி அளித்தோம். கற்றலை அனுபவித்து மகிழ்ந்தார் கார்த்திகா.


கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்திய கூட்டுறவு கற்பித்தல் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன். இதில் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பாடங்களைக் கற்கின்றனர். ஓர் ஆசிரியராகவும் நிறைய கற்றுக் கொள்ள இந்த பயிற்சி வாய்ப்பளிக்கிறது.


இதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், சிறந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் அளவுக்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் தேவையெல்லாம் வாய்ப்புகளும், அவர்களின் திறமையை வெளிப்படுத்த சிறந்த களங்களும்தான். இது கார்த்திகாவுக்குச் சரியாகக் கிடைத்திருக்கிறது" என்கிறார் ஸ்வாதி.


கார்த்திகாவும் தந்தை ஒரு தினக்கூலி பெறும் தொழிலாளி; துணிக்கடையில் வேலை செய்கிறார். அவரின் தாய் இல்லத்தரசி என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...