வணிக வரித்துறை ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
நேற்று வெளியிட்ட அறிக்கை:பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இப்பிரச்னையை தீர்க்க, கடந்த காலங்களில் நடந்த பேச்சுக்களில் அரசு உறுதி அளித்த
போதிலும், இப்பிரச்னை இன்று வரை தொடர்கிறது. எனவே, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
அதன் பின்னும் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், சாகும்வரை பட்டினி போராட்டம் உள்ளிட்ட தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்செயல் விடுப்பு போராட்டத்தால், வணிகவரித் துறையில், இரண்டு நாட்களுக்கு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு
உள்ளது.