போலி சான்றிதழ் கொடுத்து, அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தொடர்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, தனிப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதற்கு துணை
போன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆசிரியைகள் உட்பட பலர் தலைமறைவாகி உள்ளனர்.அதுபோல, வேலுார் மாவட்டத்தில், 14 பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலை செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ராணுவத்திலும் பலர், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.இதுபோல பல மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன.