சென்னை மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்வது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்திட கலந்தாலோசகரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மாநகராட்சிப் பள்ளிகளில் விளம்பரம் செய்வதற்கான அளவுகோல் என்ன? அனைத்துவிதமான
விளம்பரங்களும் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் இடம் பெறுமா என்பன போன்ற கேள்விகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து பதிலேதும் இல்லை. மேலும், பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்வதற்கான அனுமதித் திட்டத்திலும் இதுதொடர்பான விரிவான அம்சங்கள் இடம் பெறவில்லை.
கடந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் விளம்பரங்களை மேற்கொள்ளும் வகையில் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அந்த இடங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் சென்னை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக அரசின் நான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வழிவகைகளைப் பயன்படுத்தி, விளம்பரங்கள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையானது தமிழக அரசால் ஏற்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், சாலைகள் மற்றும் தெருக்களை முகப்பாகக் கொண்ட சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பள்ளிச் சுவர்களில் விளம்பரப் பலகைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதிக் கட்டணம் மூலமாகவும், விளம்பர வரி மூலமாகவும் சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு கலந்தாலோசகரை நியமனம் செய்ய சென்னை மாமன்றம் அனுமதி வழங்கியது.
எதிர்ப்பு: மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்கள் தவிர, வேறு எந்த விளம்பரங்களும் வைக்கக் கூடாது எனக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வருவாயைப் பெருக்கும் நோக்கில் விளம்பரங்களை வைக்க மாநகராட்சி முடிவு செய்யும்பட்சத்தில், அதற்கான கொள்கை முடிவையும், வரன்முறைகளையும் பின்பற்ற வேண்டும். மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் எந்தெந்த இடத்தில், எவ்வாறான விளம்பரம் வைக்க அனுமதிக்கலாம் என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போதைய விளம்பரங்கள் பெரும்பாலும் மாணவர்களின் சிந்தனையை திசைதிருப்பக் கூடியவையாக இருக்கின்றன. எனவே, சென்னை மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்வதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது:
இப்போதுதான் விளம்பரங்கள் வைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை வந்த பிறகே சென்னை மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் விளம்பரங்கள் வைக்கப்படுமா என்பது தெரியவரும் என்றார் அவர்.